சூர்யாவுடன் காந்தாரா நடிகை இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
சூர்யாவுடன் எடுத்துககொண்ட படத்தை காந்தாரா பட நடிகை சப்தமி கௌடா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து சில நிமிடங்களுக்கு தனது இதயம் துடிக்காமல் நின்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பட நிகழ்வு ஒன்றில் இருவரும் கலந்துகொண்டபோது இந்தப் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. மேலும் கேஜிஎஃப் நடிகர் யஷ் மற்றும் பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சப்தமி பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | நடிகர் ஜெயம் ரவிக்கு கரோனா!
சிறிய படமாக இருந்தாலும் சரி, ஒரு படம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அந்தப் பட நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குவிவது வழக்கம். அந்த வகையில் காந்தாரா படத்துக்கு இந்திய அளவில் கிடைத்துள்ள கவனம் காரணமாக நடிகை சப்தமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.