முகப்பு
செய்திகள்

வெளியானது உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' பட பரபரப்பு டீசர் !

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் பட டீசர் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் பட டீசர் வெளியாகியுள்ளது. 

தடம் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு மகிழ் திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். 

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை வைத்து பார்க்கும்போது படத்தில் ஒரு முக்கிய சமூக பிரச்னையை திரில்லர் பாணியில் சொல்லப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.