செய்திகள்

வெளியானது தனுஷின் 'வாத்தி' புதிய போஸ்டர்

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்திலிருந்து  புதிய போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

DIN

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்திலிருந்து  புதிய போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுவரை படத்தின் பணிகள் முடிவடையாததால் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

தீபாவளியை முன்னிட்டு இப்படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. போஸ்டரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா

உதகை சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை

உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரம்: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT