தமிழ் திரைப்படத்தைத் தயாரிக்கும் தோனி 
செய்திகள்

தமிழ் திரைப்படத்தைத் தயாரிக்கும் தோனி

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களை அவர் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக தமிழில் அவர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அண்மைகாலங்களில் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார்.

எனினும் யார் யார் நடிக்க உள்ளனர்? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT