பிரதமர் நரேந்திர மோடியின் வந்தே மாதரம் விடியோ பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்கில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
அப்போது வீரர்கள் அவருக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலை பாடினர். அதை பிரதமர் மிகவும் ரசித்துக்கேட்டார். அப்போது எடுக்கப்பட்ட விடியோவை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதையும் படிக்க | பாட்டு, நடனம் என களைகட்டிய நடிகர் சிவகுமார் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்டம் (விடியோ)
இதனைப் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்,
''இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்'' என வந்தே மாதரம் பாடலின் தமிழ் வரிகளைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.