செய்திகள்

'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

DIN

அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நித்தம் ஒரு வானம்’. வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள  இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

சுபாவாக ரிது வர்மா, மதியாக அபர்ணா பாலமுரளி, மீனாட்சியாக சிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்திலிருந்து ‘உனக்கென நான்’ எனும் பாடல் வெளியாகியிருந்தது. 

இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT