செய்திகள்

இயக்குநர் விக்ரமன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் கே.எஸ்.ரவிக்குமார்

இயக்குநர் விக்ரமனின் மகனை கே.எஸ்.ரவிக்குமார் தனது ஹிட் லிஸ்ட் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். 

DIN

இயக்குநர் விக்ரமனின் மகனை கே.எஸ்.ரவிக்குமார் தனது ஹிட் லிஸ்ட் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். 

சூரிய வம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என தமிழில் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். 90களின் குழந்தைகளுக்கு இன்றளவும் இவரது படங்கள் விருப்பமானவை. 

இந்த நிலையில் இவரது மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹிட் லிஸ்ட் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சூரியக் கதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இக்குகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், வெற்றிமாறன், விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் படத்தில் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

SCROLL FOR NEXT