செய்திகள்

வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் 75 ரூபாயில் படம் பார்க்கலாம் - என்ன காரணம் ?

செப்டம்பர் 16 ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

DIN

செப்டம்பர் 16 ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது இப்பொழுது மிகவும் யோசனைக்குரியதாக இருக்கிறது. காரணம் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும். 

சமீபத்தில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டதற்கு காரணம் டிக்கெட் விலை ஒரு காரணமாக கூறப்பட்டது. அதனால் பெரும்பாலும் ஓடிடியிலேயே படம் பார்க்க விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி மட்டும் டிக்கெட் விலை ரூ.75தான். காரணம் இதுதான். தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

இரவு 10 மணி வரை சென்னை, புறநகருக்கு பலத்த மழை எச்சரிக்கை!

டிசம்பர் புன்னகை... இவானா!

"நாடகம் வேண்டாம்!" மோடி Vs கார்கே | செய்திகள்: சில வரிகளில் | 1.12.25

சென்னையில் திரளும் மேகக்கூட்டம்... மழை மேலும் அதிகரிக்கும்..!

SCROLL FOR NEXT