செய்திகள்

’பிரம்மாஸ்திரம்' படத்தின் பட்ஜெட் இத்தனை கோடிகளா? அதிர்ச்சியில் பாலிவுட்

ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரம் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரம் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவான ‘பிரமாஸ்த்ரா’ திரைப்படம் தமிழில் ‘பிரம்மாஸ்திரம்’ என்கிற பெயரில் வெளியாக உள்ளது.

இந்து கடவுளான சிவனின் அவதாரமாக ரன்பீர் கபூர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கிராஃபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப செலவுகளால் படத்தின் பட்ஜெட் ரூ.400- கோடியைத் தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மூன்று பாகங்களாக வெளியாகவுள்ள ’பிரம்மாஸ்திரம்’ படத்தின் முதல் முதல்பாகம் வருகிற செப்.9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.

ஏற்கனவே, பாலிவுட் படங்கள் மிகப்பெரிய புறக்கணிப்பைச் சந்தித்து வருகிற நிலையில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான ‘பிரம்மாஸ்திரம்’ படத்திற்கு என்ன நடக்கப் போகிறது? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT