செய்திகள்

சீமான் படத்துக்கு தமிழ்நாடு அரசு விருது

DIN

தமிழ்நாடு அரசின் விருது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்துக்கும் வழங்கப்படவிருக்கிறது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில் வருகிற 4 ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதை வழங்குகிறார். 

இந்த நிலையில் ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2009 ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணன் தம்பிகளாக பிரபல இயக்குநர்கள் நடித்திருந்த இந்தப் படத்தில் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் பேசாம பேசாம.. எனத் துவங்கும் பாடலையும் அவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கிய ராசு மதுரவன் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT