செய்திகள்

சுந்தர்.சியின் 'காஃபி வித் காதல்' - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சுந்தர்.சியின் காஃபி வித் காதல் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சுந்தர்.சியின் காஃபி வித் காதல் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் சுந்தர்.சியின் படங்கள் என்றாலே 'கலகலப்பு'க்கு பஞ்சமிருக்காது. கடைசியாக ஆக்ஷன், அரண்மனை 3 போன்ற திரில்லர் படங்களை இயக்கிய சுந்தர்.சி மீண்டும் தனது பலமான நகைச்சுவை படத்தைக் கையிலெடுத்திருக்கிறார். 

காஃபி வித் காதல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்தப் படம் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT