முகப்பு
செய்திகள்

திருச்சிற்றம்பலம் படத்தின் 'தாய் கிழவி' பாடல் விடியோ வெளியானது!

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் தாய் கிழவி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

செய்திகள்

திருச்சிற்றம்பலம் படத்தின் 'தாய் கிழவி' பாடல் விடியோ வெளியானது!

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் தாய் கிழவி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் தாய் கிழவி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 18 ஆம் தேதி வெளியான படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

கர்ணன் படத்துக்கு பிறகு தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்', ஹிந்திப் படமான 'அத்ரங்கி ரே', 'மாறன்', ஆங்கிலப் படமான 'தி கிரே மேன்' ஆகிய 4 படங்களும் ஓடிடியில் வெளியாகின. இதனால் திரையரங்கில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 

தற்போது இப்படத்தின் தாய் கிழவி பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →