செய்திகள்

ஆசிரியர் தின வாழ்த்தால் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து

ஆசிரியர் தின கவிதையால் பாடலாசிரியர் வைரமுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

DIN

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவரது கவிதை, 
    
ஆசான்கள் ஆயிரம்பேர்

எழுத்தறிவித்தவர் மட்டுமல்லர்
ஏர்பிடிக்கக் கற்றுக்கொடுத்தவரும்
என் ஆசான்தான் 

நியூட்டன் மட்டுமல்ல
நீச்சல் கற்றுத்தந்த 
தலித் நண்பனும் 
என் ஆசான்தான்

நற்றிணை மட்டுமல்ல
நாட்டார்மொழி கற்றுத்தந்த
பாமரனும் என் ஆசான்தான்

உலகம் வகுப்பறை

ஆசிரியர்களே
வணங்குகிறேன்

என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரது பதிவில் நியூட்டன் மட்டுமல்ல நீச்சல் கற்றுத்தந்த என் தலித் நண்பனும் என் ஆசான்தான் என அவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில்,  நண்பர்களிடம் கூட இனம் பார்த்து தான் பழகுவீர்களா எனவும், நண்பனில் என்ன தலித் நண்பன் எனவும் அவரைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருங்காட்சியகமாக மாறுகிறதா ரவீந்திரநாத் தாகூரின் வீடு!

தந்தை அறிமுகமான நாளில் பைசனுடன் வரும் துருவ் விக்ரம்!

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காஸா பற்றிய கவலை ஏன்? அண்ணாமலை

ரயில்வேயில் கட்டுப்பாட்டாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

97-வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்!

SCROLL FOR NEXT