செய்திகள்

உறியடி விஜய் குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மற்றும் நடிகராகிய விஜய் குமார் நடித்துள்ள புதிய படத்தின் படபிடிப்பு 62 நாட்களிலே முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மற்றும் நடிகராகிய விஜய் குமார் நடித்துள்ள புதிய படத்தின் படபிடிப்பு 62 நாட்களிலே முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை ‘சேத்துமான்’ இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். எழுத்தாளர் அழகிய பெரியவன், விஜய் குமார், இயக்குநர் தமிழ் மூவரும் இணைந்து படத்தின் வசனத்தை எழுதியுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, வத்திக்குச்சி புகழ் திலீபன், கைதி புகழ் ஜியார்ஜ் மரியம், வட சென்னை புகழ் பவல் நவனீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.  

அரசியல், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள் என சரிசமமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஷெட்யூலில் 62 நாட்களில் ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருவதால் படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படப்பிடிப்பு முடிந்ததை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஜய் குமார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT