முகப்பு
செய்திகள்

சிரஞ்சீவி-சல்மான் நடிக்கும் ‘காட்ஃபாதர்’: முதல் பாடலின் முன்னோட்ட விடியோ வெளியானது!

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி-சல்மான் இணைந்து நடித்த காட்ஃபாதர் படத்தின் முதல் பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி-சல்மான் இணைந்து நடித்த காட்ஃபாதர் படத்தின் முதல் பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளப் படமான லுசிஃபர் படத்தின் ரீமேக் இது. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா.  இப்படத்தில் சிறிய வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் முதல் பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் சிரஞ்சீவி சல்மான் இருவரும் இணைந்து இருக்கிறார்கள் என்பதே சிறப்பு. முழுமையான பாடல் செப்டம்பர் 15இல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தப் படம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →