செய்திகள்

பொன்னியின் செல்வனின் ’ராட்சஸ மாமனே’ பாடல் வெளியீடு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ‘ராட்சஸ மாமனே’ பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ‘ராட்சஸ மாமனே’ பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

அன்று படத்தின் பாடல்களும் வெளியான நிலையில், தற்போது ‘ராட்சஸ மாமனே’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கபிலனின் பாடல் வரிகளும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனால் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

முன்னதாக, ‘பொன்னி நதி’ ‘சோழா..சோழா’ ஆகிய பாடல்களின் லிரிக்கல் விடியோ வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் - மாரி! கேட்டதும் நடிக்க ஒத்துக்கிட்டேன்! அமீர் | Bison | Audio Launch

நீதி வெல்லும்! தவெக விஜய் கருத்து!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

கரூர் பலி: எஸ்.ஐ.டி., ஒரு நபர் ஆணைய விசாரணை நிறுத்திவைப்பு!

மையுண்ட கண்கள்... ரெபா!

SCROLL FOR NEXT