செய்திகள்

மீண்டும் இயக்குநராகும் சிம்பு !

வல்லவனுக்கு பிறகு நடிகர் சிம்பு மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

வல்லவனுக்கு பிறகு நடிகர் சிம்பு மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தன் பாடல்களும் டிரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தற்போது பத்து தல படத்தில் சிம்பு நடித்துவரும் நிலையில் அடுத்ததாக சிம்பு இயக்கும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. மன்மதன் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியிருந்த சிம்பு, வல்லவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

கலவையான விமர்சனங்களைப் பெற்ற வல்லவன் திரைப்படம் சிம்பு ரசிகர்கள் பலருக்கும் விருப்பமான படமாக இருந்துவருகிறது. குறிப்பாக யுவன் இசையில் வல்லவன் படப் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றன. 

வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வந்தால் வல்லவன் வெளியாகி 16 ஆண்டுகளாகிவிடும். இந்த நிலையில் மீண்டும் திரைப்படம் இயக்க முடிவெடுத்துள்ள சிம்பு தற்போது  கதையொன்றை எழுதியுள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT