செய்திகள்

வசூலைக் குவிக்கும் ‘வாரிசு’ வியாபாரம்: ஓடிடி விற்பனை இத்தனை கோடிகளா?

நடிகர் விஜய் நடித்துவரும் ’வாரிசு’ திரைப்படத்தின் வியாபாரம் மிகப்பெரிய தொகையில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN


நடிகர் விஜய் நடித்துவரும் ’வாரிசு’ திரைப்படத்தின் வியாபாரம் மிகப்பெரிய தொகையில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.60 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் சாட்டிலைட் உரிமம் ரூ.60 கோடி மற்றும் டிஜிட்டல்  ரைட்ஸ் ரூ.50 கோடிக்கும் பாடல்கள் ரூ.10 கோடிக்கும் என மொத்தம் ரூ.180 கோடி வரை ‘வாரிசு’ வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையிலேயே இத்தனை பெரிய வியாபாரத்தை செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக,  இப்படத்தின் படப்பிடிப்பு தளம் மற்றும் நடிகர்களின் வருகை ஆகியவை விடியோவாக வெளியானதுடன் நடிகர் விஜய் நடிக்கும் சில காட்சிகளையும், புகைப்படங்களையும் செல்போனில் படப்பிடித்து சிலர் இணையத்தில்  வெளியிட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT