செய்திகள்

மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.  

DIN

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.  

‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார்.

படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

நிறைவு நாளில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

’மாமன்னன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு பல்சர் டிரைலர்!

தென் மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!

பத்ரிநாத் - கேதார்நாத் கோயில்களில் ஹிந்து அல்லாதோருக்குத் தடை!

ரஜினி - கமல் படத்திலிருந்து வெளியேறியது ஏன்? கைதி - 2 என்ன ஆனது? லோகேஷ் பதில்!

ஆளுநர் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT