செய்திகள்

நெட்பிளிக்ஸ் தொடர்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ஏ.ஆர். ரஹ்மான் சொல்லும் காரணம்!

நெட்பிளிக்ஸ், பிரைம் ஓடிடிக்களில் உள்ள வெளிநாட்டு இணையத் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

DIN

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

பொன்னியின் படம் வெளிவருவதையொட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது:

தெலுங்குத் திரைத்துறையில் பணிபுரிய ஆரம்பித்து 38 வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய அடித்தளங்களில் தெலுங்குப் பட இசையும் ஒன்று. பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு நெட்பிளிக்ஸ், பிரைம் ஓடிடிக்களில் உள்ள வெளிநாட்டு இணையத் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். ஏனெனில் இது நன்றாக உள்ளது. நம் கலாசாரம், நம் ரத்தம், நம் முகம். அனைவருக்கும் நன்றி. என்னுடைய அமெரிக்க இசைக் கச்சேரிகளுக்கு வந்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT