நடிகர் பார்த்திபன் 
செய்திகள்

'ஐஸ் வாரியம்': யாரை வர்ணித்தார் பார்த்திபன்!

பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படபிடிப்புத் தளத்தில் நடிகர்-நடிகைகள் எடுத்துகொண்ட சுயபடங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

DIN

பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படபிடிப்புத் தளத்தில் நடிகர்-நடிகைகள் எடுத்துகொண்ட சுயபடங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கவிதை வடிவில் ஐஸ்வர்யாராயை பாராட்டிய பதிவில், “ஐஸ் வாரியம் !...கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார். அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்.” என்று வெளியிட்டுள்ளார்.


'பொன்னியின் செல்வம்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்திலும்,  பார்த்திபன் சின்ன பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT