செய்திகள்

பொன்னியின் செல்வன்: முன்னோட்டக் காட்சி வெளியானது! 

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில நிமிட முன்னோட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

DIN


இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில நிமிட முன்னோட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், படத்தின் சில நிமிட முன்னோட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பாண்டியர்களது காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. சோழர்களை பழிவாங்க வேண்டுமென அவர்கள் சபதமெடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

மோடியின் கொள்கை தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம்: ஜெய்ராம் ரமேஷ்

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

SCROLL FOR NEXT