முகப்பு
செய்திகள்

சிரஞ்சீவி - சல்மான் கான் நடித்துள்ள ’காட்ஃபாதர்’ டிரைலர் வெளியீடு

சிரஞ்சீவி - சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்ஃபாதர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

சிரஞ்சீவி - சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்ஃபாதர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில்  மலையாளத்தில் வெளியான  லுசிஃபர் படத்தின் தெலுங்கு  ரீமேக் ’காட்ஃபாதர்’. 

இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் சிரஞ்சீவியின் தம்பியாக சல்மான் கானும் நடித்துள்ளனர். இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா. 

முன்னதாக,  தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிக்கான படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 57 கோடிக்கு விலை பேசியுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

‘காட்ஃபாதர்’ அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →