செய்திகள்

சோழ தேசத்தில் பொன்னியின் செல்வன்: நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி

பொன்னியின் செல்வனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

DIN

பொன்னியின் செல்வனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தஞ்சையில் உள்ள சாந்தி திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மண்ணுக்கு என் மதிப்புக்குரிய வணக்கம். ராஜராஜ சோழனுக்கு வணக்கம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இந்த தஞ்சை மண்ணில் பார்ப்பதை பெருமையாக நினைக்கிறேன். 

1,973 இல் மார்ச் 31ஆம் தேதி ராஜராஜ சோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன். அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க வந்துள்ளேன். நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய் விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். எல்லா சினிமாவையும் வரவேற்பது என்னுடைய பழக்கம். பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். 

பொன்னியின் செல்வனில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக பார்க்கிறேன். கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்து உள்ளார்கள். ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி. கல்கியின் எழுத்துக்கள் தான் முதல் வெற்றி. 

அடுத்தது மணிரத்னம் இயக்கத்திற்கு. இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம் தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்ப்பதற்காக வரவில்லை, இந்த படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 போ் விடுதலை: யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது - மும்பை உயா்நீதிமன்றம்

ஜி.கே.மணி குற்றச்சாட்டுக்கு அன்புமணி தரப்பு பதில்

20 ஆண்டு பணிக்காலத்துக்குப் பின் விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஊதியம்

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பை போற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT