செய்திகள்

’தியேட்டர்ல இப்படி பண்ணாதீங்க..’ இயக்குநர் கௌதம் வாசுதேவ் வேதனை

DIN

திரையரங்கம் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் கோரிக்கை வைத்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

நீண்ட நாள் கழித்து கௌதம் வாசுதேவ் - சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் இப்படம் உருவாகியிருந்தது.

இந்நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தார்.

அப்போது, இப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கௌதம் மேனன் ‘மல்லிப்பூ பாடலை ஒரு பெண்ணை ஆட வைத்து காட்சிபடுத்துவதற்குப் பதிலாக ஏன் ஆண்களையே ஆட வைக்கக்கூடாது என நினைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  மேலும், திரையரங்கம் செல்லும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த படத்தின் 15 - 20 வினாடி காட்சிகளை செல்போனில் படம்பிடித்து இணையத்தில் பகிர்கிறார்கள். இது தவறான செயல். புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இப்படி காட்சிகளை பதிவு செய்து பரப்ப வேண்டாம். ஒரு சினிமாவை உருவாக்க பலரின் உழைப்பும் ஈடுபாடும் அதிகம் தேவைப்படுகிறது.’ என வேதனையாக கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT