முகப்பு
செய்திகள்

இயக்குநராகும் சிவகார்த்திகேயன்... எந்தப் படத்தில்?

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் சின்னப்பம்பட்டியில் பிறந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடிவருபவர் நடராஜன்.

தற்போது, காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருக்கிறார்.

ஏழ்மையிலிருந்து ஐபிஎல், இந்திய அணி வரை உயர்ந்த நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது.

இந்நிலையில், அவருடைய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதுடன் இப்படத்தையும் இயக்க உள்ளதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நடராஜனை சிவகார்த்திகேயன், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் சந்தித்திருந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மகளிர் கிரிக்கெட்டை முன்வைத்து ‘கனா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.