முகப்பு
செய்திகள்

பிரபல நகைச்சுவை பட இயக்குநருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி: அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் தோற்றப் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி அடுத்ததாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட நகைச்சுவை படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்கிரின் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும்  அகிலன் படத்தில்தான் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.