முகப்பு
செய்திகள்

‘அர்த்தம் வாய்ந்த ஜெய்பீம் கதாபாத்திரம்’: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

Updated On : 2 நவம்பர், 2022 at 5:27 PM
பகிர்:

‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படத்திற்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். 

இதையும் படிக்க | மீண்டும் பாலிவுட் செல்லும் ஜீவா

Advertisement

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் பிரச்னைகளை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருப்பதாக இந்தப் படத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவான நிலையில் நடிகர் சூர்யா இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அர்த்தம் பொதிந்த இந்தத் திரைப்படத்தை எனக்கு வழங்கிய எனது சகோதரர் இயக்குநர் ஞானவேலுக்கு நன்றி. என்னுடைய திரைப்பயணத்தில் நீதியரசர் சந்துரு கதாபாத்திரம் எனக்கொரு அடையாளம். எனது ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.