செய்திகள்

பிருத்விராஜ் - நயன்தாராவின் ‘கோல்டு’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

DIN

நயன்தாரா - பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கோல்டு திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார்.

பிருத்விராஜ், நயன்தாரா முதன்மை வேடத்தில் உருவாகியுள்ள ‘கோல்டு’ திரைப்படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்திற்கு திரைக்கதை இயக்கமட்டுல்லாமல் எடிட்டிங், அனிமேஷனும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் செய்யவிருப்பது கூடுதல் சிறப்பம்சம்.

இந்நிலையில், இந்த படம் டிசம்பர் மாதம் 1-ஆம் நாள் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT