முகப்பு
செய்திகள்

அமிதாப் பச்சன்- ராஷ்மிகா நடித்த ‘குட்பை’: புதிய அப்டேட் வெளியானது!

அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் டிரைலர் நாளை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் டிரைலர் நாளை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன், நீனா குப்தா ஆகியோர் நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தினை குயின், சூப்பர் 30 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விகாஸ் பால் இயக்கி இருக்கிறார். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

தற்போது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அத்துடன் டிரைலர் நாளை வெளியாகுமெனவும் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.