செய்திகள்

விடுதலை தெலுங்கு ரிலீஸ் உறுதி

தமிழின் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

DIN

தமிழின் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

நடிகர் சூரி இந்தப் படத்தை, “பிரம்மாண்ட வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி. விரைவில் அடுத்த பாகத்துடன் சந்திப்போம்” எனக் கூறியிருந்தார். 

இந்தப் படம் ரூ.28 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெற்றியினால் இயக்குநர் வெற்றி மாறனும் படக்குழுவினருக்கு தங்கக் காசுகளை பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது கீதா ப்லிம் டிஸ்டிபூஷன் இந்தப் படத்தினை தெலுங்கில் வெளியிடுமென தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஏப்.15ஆம் தேதி தெலுங்கில் விடுதலை திரைப்படம் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT