முகப்பு
செய்திகள்

”கங்குவா 1,500 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை..”: இயக்குநர் சிவா

கங்குவா திரைப்படம் குறித்து இயக்குநர் சிவா புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

Updated On : 18 ஏப்ரல், 2023 at 4:27 PM
பகிர்:

கங்குவா திரைப்படம் குறித்து இயக்குநர் சிவா புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிவா பேட்டி ஒன்றில், “ கங்குவா என் கனவுத் திரைப்படம். 1,500 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக இப்படம் உருவாகிறது. கங்குவா என்றால் நெருப்பாய் இருப்பவர் என்று பொருள்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.