செய்திகள்

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்!

குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேறுபவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேறுபவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன் வெளியேறியுள்ள நிலையில், தற்போது ஷெரின், சிவாங்கி, விசித்ரா, ஆன்ட்ரியன், மைம் கோபி, சுருஸ்டி ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

சென்ற வாரம் நடந்த இம்யூனிட்டி சுற்றில் கடந்த சீசன்களில் பங்கேற்ற ரேகா, ஷகிலா, ரோஷினி போட்டியாளர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் இந்த சீசன் போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இந்த போட்டியில் ஷகிலா இம்யூனிட்டியை வென்றார்.

வழக்கமாக  இம்யூனிட்டி சுற்றில், ஒருவர் அடுத்த வார எலிமினேஷலிருந்து காப்பாற்றப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சீசனை சேர்ந்த ஷகிளா இம்யூனிட்டியை வென்றதால், இதனால், இந்த வார எலிமேனிஷன் சுற்றுக்கு 6 குக்குகளும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வார ப்ரோமோவில் சிவாங்கி, சுருஸ்டி, ஷெரின் எலிமேனிஷன் சேலஞ் சுற்றுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் ஷெரின் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னினும் நாளை ஒளிப்பரப்பாகும் எபிசோட்டில் உறுதியான தகவல் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT