செய்திகள்

வெளியானது கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டீசர்!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் அருள்நிதி நடிப்பில் ராட்சசி பட இயக்குநர் சை கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன்.

ஒலிம்பியா மூவிஸ் வழங்கும் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை கதாநாயகி துஷாரா விஜயன் மற்றும் சந்தோஷ் பிர்தாப், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். 

சமீபத்தில் டாடா படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் தயாரிப்பாளர்தான் இந்தப் படத்திற்கும் என்பதால் ரசிகர்களிடையே கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. 

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய நாகூரன் எடிட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்க வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT