செய்திகள்

போலியான செய்தியை பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை: ஹிந்தி நடிகை ஆவேசம் 

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா ட்விட்டர் பயனாளர் குறித்து புகார் அளித்துள்ளார்.

DIN

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் இவரை பிளாக் செய்தார். 

தெலுங்கில் அகில் அக்கேனி உடன் ஏஜெண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் ஒரு பயனாளர் சினிமா விமர்சகரென அறியப்படுவர் அகில் அக்கேனி ஊர்வசியை பாலியல் துன்புறுத்தியதாக எழுதியிருந்தார். இதுகுறித்து  நடிகை ஊர்வசி ரைடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: 

எனது குழுவினால் உங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரமற்ற ட்வீட்டின் மூலம் தரக்குறைவாக நடந்துக் கொள்ளும் நீங்கள் என்ன பத்திரைக்கையாளர்? நீங்கள் என்னுடைய அதிகாரபூர்வமான செய்தி தொடர்பாளர்கூட கிடையாது. நீங்கள் ஒரு அரைவேக்காடு பத்திரைக்கையாள. உங்களால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மன உலைச்சல் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT