செய்திகள்

இராவண கோட்டம் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

ஷாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இராவண கோட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பிரபல இயக்குநர் நடிகருமான பாக்யராஜின் மகன் ஷாந்தனு. சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சோனி இணையத் தொடரில் (ஸ்டோரி ஆஃப் திங்ஸ்) ஒன்றிலும் நடித்துள்ளார். 

தற்போது, கண்ணன் ரவி தயாரிப்பில் ‘இராவண கோட்டம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். 

இந்தப்படத்தின் டிரைலர் நல்ல கவனம் பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT