செய்திகள்

விரைவில் தென்றல் 2 சீரியல்: இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'தென்றல் 2'  சீரியல், விரைவில் புதிய கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

'தென்றல் 2'  சீரியல், விரைவில் புதிய கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தென்றல் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த சீரியலில் ஸ்ருதி ராஜ் மற்றும் தீபக் தினகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

இவர்களுடன் ஹேமலதா, ஸ்ரீவித்யா, ஆடம்ஸ், ஐயப்பன், சாந்தி வில்லியம்ஸ், சாதனா, ஐஸ்வர்யா, நீலிமா ராணி, ஆர்த்தி, ஷியாம் விஸ்வநாதன், ராஜா, சுந்தர், சுஜாதா பஞ்சு, எஸ்.ராஜசேகர், சுஜிதா, எஸ்.என்.லட்சுமி, ஆண்டனி ராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர்.

தென்றல் சீரியலில் வெற்றியைத் தொடர்ந்து 2 ஆம் பாகத்தை எடுக்க இயக்குநர் குமரன் முடிவெடுத்துள்ளார்.

தென்றல் 2 சீரியலை எஸ்.குமரன் இயக்குகிறார். எஸ். குமரன் சமூக வலைதளப்பக்கத்தில், "இதுவரை எனது பயணத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன். தென்றல் 2 நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும், விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்" எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT