கோப்புப்படம் 
செய்திகள்

நடிகை கஸ்தூரி கேள்விக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்! 

சமூக வலைதளத்தில் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார்.

DIN

சமூக வலைதளத்தில் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் விருது வழங்கும் விழாவில்  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடன் பங்கேற்றார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதை குறித்து  உங்களது கருத்தை தெரிவிக்குமாறு அவர் மனைவி சாய்ரா பானுவிடம், தொகுப்பாளர் கோரிக்கை வைத்தார்.

தன்னுடைய மனைவி சாய்ரா பானுவிடம் ரஹ்மான், "இந்தி வேண்டாம், தமிழில் பேசு" எனக் கூறினார்.  அதற்கு சாய்ரா பானு, "எனக்கு, சரளமாக தமிழ் பேச முடியாது, ஆங்கிலத்தில் உரையாட அனுமதிங்கள்" எனக் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

இதனிடையே நடிகை கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில், "என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ்  வராதா?  அவங்க தாய் மொழி என்ன ?   வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'காதலுக்கு மரியாதை' என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

SCROLL FOR NEXT