செய்திகள்

தாமதமாக வெளியானது பிச்சைக்காரன் 2 டிரைலர்! 

நடிகா் விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, தயாரித்துள்ள  பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

இந்தப் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜகணபதி என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகா் ஆா்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தை தயாரித்தது. 2016-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் கதையை அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து நடிகா் விஜய் ஆண்டனி ‘ பிச்சைக்காரன் -2’ என்ற படத்தை எடுத்துள்ளதாகவும், எனவே அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாா். இந்தப் பிரச்னைக்கு சமீபத்தில் முடிவுக்கு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தப் படம் மே 19ஆம் தேதி வெளியாக உள்ளதென விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 11 மணிக்கு வெளியாக இருந்தது தாமதமாக வெளியானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT