செய்திகள்

700 கோடி மக்களில் நீங்கள்தான் அழகு: த்ரிஷாவை பாராட்டும் ரசிகர்கள் 

பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடிகை த்ரிஷாவின் அழகினை பலரும் பாராட்டி வருகின்றனர். 

DIN

மும்பை, ஆந்திரம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி உள்ளார்கள். தமிழ் ரசிகர்களும் எந்தப் பேதமும் பார்க்கமால் இதர மொழிக் கதாநாயகிகளைக் கொண்டாடி வருகிறார்கள். இந்தச் சூழலை மாற்றிக் காட்டியவர் த்ரிஷா. 

முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே (2002) தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம். பின்னர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். 

த்ரிஷா நடிப்பில் 2019-ல் பேட்ட, 2021-ல் பரமபதம் விளையாட்டு ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவரது அழகு கூடிக்கொண்டே போனதாக ரசிகர்கள் பாராட்டினர். 

பொன்னியின் செல்வன்-2 வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்று வருகிறது. த்ரிஷாவின் அழகினை ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். 

அதில் ஒரு ரசிகர் உலகத்தில் 700 கோடி மக்கள் இருந்தாலும் நீங்கள்தான் அழகு என வர்ணித்துள்ளார். 

அடுத்து சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன. த்ரிஷா நடிக்கும் புதிய இணையத்தொடர் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக த்ரிஷா தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT