செய்திகள்

நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்!

DIN

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தன் காதலியான மோனிகா என்பவரை வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோனிகா

முன்னதாக, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட கவினும் லாஸ்லியாவும் நெருக்கமாக பழகி வந்தனர். விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா அவரைக் கண்டித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசுவதை தவிர்த்துவந்தனர். அதன்பின், அவர்கள் பிரிந்துவிட்டதை லாஸ்லியா உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT