செய்திகள்

எதிர்நீச்சல் தொடருக்கு போட்டி: விரைவில் மெட்டி ஒலி - 2!

விரைவில் மெட்டி ஒலி - 2 தொடர் சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விரைவில் மெட்டி ஒலி - 2 தொடர் சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிப்பரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி தொடர். இந்த தொடர் 2002 ஆம் ஆண்டு முதல் 2005 வரை 811 எபிசோட்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. கரோனா காலக்கட்டத்தில் இந்த தொடரின் மறுஒளிபரப்பையும் ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர்.

மெட்டி ஒலி தொடரை இயக்குநர் திருமுருகன் நடித்து இயக்கி இருந்தார். ஒரு தந்தை, அவருக்கு 5 மகள்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து படும் கஷ்டங்களைக் கொண்டு கதைக்களம் அமைந்திருக்கும். இந்த தொடர் 90களில் பிறந்தவர்களின் விருப்பமானதாக இருந்தது. 

இந்த தொடரின் டைட்டில் பாடலான 'அம்மி அம்மி அம்மி மிதித்து' பாடல் மிகவும் பிரபலமானதாக இருந்தது. இந்தத் தொடரில் டில்லி குமார், காயத்ரி, சேத்தன், காவேரி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

இந்த நிலையில், மெட்டி ஒலி தொடரின் 2 பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் சன் டிவியில் ஒளபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சன் டிவியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற சீரியல் எதிர் நீச்சல். மெட்டி ஒலி - 2 ஒளிபரப்பானால் எதிர் நீச்சல் தொடருக்கு கண்டிப்பாக போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

SCROLL FOR NEXT