செய்திகள்

நண்பன் ஒருவன் வந்த பிறகு: முதல் பார்வை போஸ்டரை வெளியிடும் சிம்பு!

வெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

DIN

வெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தை  ஒயிட் ப்லிம் ஸ்டுடியோஸ், மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

இப்படம் நண்பர்கள் தொடர்புடைய படம் என்பதால், இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு முதல் பார்வை வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

பார்வையாளர்களைக் கவரும் பாண்டா!

களியக்காவிளை அருகே நகை திருட்டு வழக்கில் இளைஞா் கைது

புரட்டாசி கடைசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆயிரம் குழந்தைகளின் பெற்றோர்!

SCROLL FOR NEXT