செய்திகள்

விஜய் 68: கதாநாயகியாக ஜோதிகா? 

நடிகர் விஜய்யுடன் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ உருவாக உள்ளது. லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நார்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குஷி படத்தில் விஜய் - ஜோதிகா. 

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடிக்க ஜோதிகாவிடம் கால்சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீவிர உடற்பயிற்சியில் நடிகை ஜோதிகா. 

2000இல் குஷி, 2003இல் திருமலை ஆகிய வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால் 20 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா-விஜய் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும். இது உண்மையாக வேண்டுமென ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT