செய்திகள்

அர்ஜுன் பிறந்தநாள்: லியோ கிளிம்ஸ் விடியோ வெளியீடு

நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புதிய கிளிம்ஸ் விடியோவை லியோ படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில்  இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் அர்ஜுன் பிறந்தநாளான இன்று லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது. இதற்காக,  ‘ஹரோல்ட் தாஸ்’ என்கிற அர்ஜுன் கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, லியோ படக்குழு  சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆண்டனி தாஸ்’ என்கிற அவர் கதாபாத்திரத்திர கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT