செய்திகள்

தனுஷ் சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம்!

தனுஷ் 50 படத்தில், தனுஷுக்கு சகோதரர்களாக நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ராயர் என்கிற தலைப்பில்(தகவல்) உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார்.

இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட எதிா்ப்பு

SCROLL FOR NEXT