ஹைதராபாத்தில் கங்குவா படப்பிடிப்பு!
கங்குவா திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.
இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாகவும் தகவல்.
படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
Advertisement
இந்நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. இதற்காக, நடிகர் சூர்யா அங்கு சென்றுள்ளார்.
இதையும் படிக்க: தனுஷ் சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம்!
முன்னதாக, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த டீசர் இதுவரை யூடியூப்பில் 3.3 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.