செய்திகள்

சந்திரமுகி - 2 படத்தில் 10 பாடல்கள்!

சந்திரமுகி - 2 படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்துள்ளார்.

DIN

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.15) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான 'ஸ்வகத்தாஞ்சலி' பாடலைப் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில்,  படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, ‘சந்திரமுகி - 2 படத்தில் எனக்கான இசைப்பணிகள் முடிந்தது. மீதமுள்ள 9 பாடல்களை வெளியிடுவதில் ஆவலுடன் இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

தங்கம் - வெள்ளி விலை சற்று குறைவு!

பணம் பேசும் வசனங்கள்... காந்தி டாக்ஸ் - திரை விமர்சனம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!

Dinamani வார ராசிபலன்! | பிப்.1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT