செய்திகள்

நான் நடிகனாகக் காரணம் என் அப்பாதான்: துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் தான் நடிக்க வந்ததற்குக் காரணம் மம்மூட்டிதான் எனக் கூறியுள்ளார். 

DIN

சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து ’கிங் ஆஃப் கோதா’ என்ற புதிய படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

இது பான் இந்தியப் படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி  என 5 மொழிகளில் வெளியாகிறது.

தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்திற்கு ’லக்கி பாஸ்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கிங் ஆஃப் கோதா’ பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துல்கர், ‘நான் பிரபல நிறுவனத்தில் மேலாளாராக இருந்து நடிகராக ஆசைப்பட்டதும் அதற்கு துணை நின்றது என் தந்தை மம்மூட்டிதான். சினிமா துறையில் அவரே என் ஆதர்சம். என் தந்தையின் படங்களை ரீமேக் செய்து நடிக்கும் விருப்பம் எனக்கில்லை. காரணம், ரீமேக் படங்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. கிளாசிக் படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT