பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தன. இந்த படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவித்த துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: என்னுடைய ஆக்ஷன் படத்தினைவிட துல்கரின் படம் நன்றாக ஓடும்: விஜய் தேவரகொண்டா நம்பிக்கை!
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது புதிய கெட்டபினை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிட்டதட்ட மொட்டை அடித்ததுபோல முடியினை மிகவும் ஒட்ட வெட்டியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிக்க: இவரது படங்களில் நடிக்காவிட்டாலும் மரியாதையுடன் பேசுவார் : கங்கனா ரணாவத் குறிப்பிடுவது யாரை?
இதையும் படிக்க: உத்தர பிரதேச ஆளுநரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் இயக்கும் படத்திற்காக விக்ரம் இதுமாதிரி மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படப்பிடிப்பு முடித்து ரஜினி 171 படத்திற்காக ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
விக்ரமின் இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள், “பீமா பட வைப்”,“பீமா படம் நினைவுக்கு வருகிறது” என கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பீமா படம் 2008இல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம். இதில் நடிகை த்ரிஷாவுடனான ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் பிரபலமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.